O novo aplicativo da Alison já está disponível para iOS e Android! Baixe Agora
நீங்கள் முதன் முறையாக ஆங்கிலம் படிப்பவராயினும் சரி, அல்லது உங்கள் ஆங்கிலம் திறனை மேம்படுத்த வேண்டுமானாலும் சரி, உங்களை சரியான பாதையில் வழிநடத்தி, உங்கள் திறனை வளர்க்க தேவையான அனைத்து பாடக்கோப்புகளும் எங்களிடம் உள்ளது!
ஆலிசனின் 60 கும் மேற்பட்ட ஆங்கில பாடங்களுடன் (courses), உலகம் முழுவதும் உள்ள 20 லட்சத்திற்கும் மேற்பட்ட எங்கள் ஆங்கிலம் கற்கும் மாணவர்களுடன், சேர்ந்து, படித்து சான்றிதழ் பெறுங்கள்.
உலகம் முழுவதும் அதிகம் பேசப்படும் ஆங்கில மொழியை, ஆலிசனின் ஆங்கிலம் படிக்கும் மைய உதவியோடு, நன்கு பேசி, பயின்று, உங்கள் ஆங்கில திறனை வளர்த்துக்கொள்ளுங்கள். எங்கள் அனைத்து பாடங்களும் (courses), மொழி வல்லுனர்களால் எழுதப்பட்டது மட்டுமல்லாமல், சர்வதேச பயிற்சி முறைகளான IELTS மற்றும் Cambridge பாடங்கள் போன்று அமைக்கப்பட்டுள்ளது.
மேற்படிப்பு, வேலை, அல்லது வேற எந்தஒரு காரணமாயினும் சரி, எங்களது பாடங்கள், உங்கள் ஆங்கில திறனை வளர்க்க உதவும். உங்களது ஆங்கில சரளம், பேச்சு, எழுத்து, அல்லது படிக்கும் திறன் - இவற்றில் எதை வளர்க்க நினைக்கிறீர்களோ, அதனை பொறுத்து எங்கள் பாடங்களை நீங்கள் தேர்வு செய்யலாம். எங்களது விரிவான ஆங்கில மொழி பாடங்களுடன், நீங்கள் வேரரெங்கும் செல்லாமல், ஒரே இடமான ஆலிசன் தளத்தில் படிக்கலாம்.
புதிதாக தொடர்பவர் நிலை
புதிதாக தொடர்பவர் நிலையில், உங்களால் மிக எளிதான, அடிப்படை ஆங்கிலம் பேச முடியும். அடுத்தவர் ஆங்கிலத்தில் மெதுவாகவும் தெளிவாகவும் பேசினால், உங்களால் பதில் கூறி உரையாட முடியும்.
புதிதாக தொடர்பவர் நிலைஆரம்ப நிலை
இந்நிலையில், உங்களால் அதிகம் பொதுவாக உபயோகிக்கும் ஆங்கில வாக்கிம் மற்றும் சொற்தொடர்களை பயன்படுத்த முடியும். உங்களால் முடிந்த எளிமையான தலைப்புகள் - உங்களை பற்றி, உங்கள் குடும்பத்தை பற்றி, நீங்கள் வேலை செய்யும் இடம், அல்லது நீங்கள் வசிக்கின்ற இடம் போன்றவற்றை உங்களால் பேச முடியும்.
ஆரம்ப நிலைஇடை நிலை
இந்நிலையில், உங்களால், நீங்கள் பயணிக்கும் போது, உங்கள் அனுபவங்கள், நிகழ்வுகள், கனவு மற்றும் இலட்சியங்கள், எதிர்பார்ப்புக்கள், குறிக்கோள் போன்ற தலைப்புகளை பேச முடியும். காரணம் மற்றும் விளக்கங்களை, உங்கள் கருத்துக்களுக்கும், திட்டங்களுக்கும் கூற முடியும்.
இடை நிலைமேல் இடை நிலை
உங்களால் சரளாமாக ஆங்கிலம் பேசுவோருடன் தடையின்றி நன்கு பேச முடிந்தால் நீங்கள் இந்நிலையை சார்ந்தவர். அதுமட்டுமின்றி, உங்களால் தெளிவாகவும், விரிவாகவும், பல தலைப்புகளில் நன்றாக பேச முடியும்.
மேல் இடை நிலைஉயர் நிலை
இந்நிலையில், உங்களால் மிக சரளமாக ஆங்கிலம் பேச முடியும். உங்கள் நண்பர்களுடனோ அல்லது சக பணியாளர்களுடனோ, எல்லா விதமான சூழ்நிலைகளிலும் உங்களால் நன்கு பேச முடியும். அதுமட்டுமின்றி சரியான கட்டமைப்புள்ள வாக்கியங்களை சிக்கலான சமயங்களிலும் கூட சரளமாக பேச முடியும்.
உயர் நிலைபுதிதாக தொடர்பவர் நிலை முதல் உயர் நிலை வரை
நீங்கள் பெற நினைக்கும் அனைத்து ஆங்கில திறன்களை ஆலிசனின் ஆங்கில பாட தொகுதி மூலம் நீங்கள் பெறலாம்.
அனைத்து டிஜிட்டல் சாதனங்களிலும் படிக்கலாம்
உங்கள் கம்ப்யூட்டர், லேப்டாப் , போன், டேப்லெட் - எதில் வேண்டுமானாலும் எளிதாக படிக்கலாம்.
எளிதாக பின்பற்றும் முறை
பாடங்களின் ஒவ்வொவொரு பக்கமும் எளிதாக பார்த்து படிக்க முடியும். இதனால் நீங்கள் சிரமம் இல்லாமல் படிக்கலாம்.
Tabbed பக்கங்கள்
அனைத்து திரைகளிலும் tabbed பக்கங்கள் உள்ளன. எந்த பக்கம் நீங்கள் படிக்க வேண்டுமோ அதை எப்பொழுது வேண்டுமானாலும் திறந்து படிக்கலாம்.
அனைத்து பாடங்களும் எழுத்து, படங்கள் மற்றும் ஆடியோ - வீடியோ கோப்புகளால் ஆனவை
எளிதான முறையில் எந்தவொரு சிரமமும் இல்லாமல் படிப்பதற்காக எங்கள் பாடங்களை நன்கு வடிவமைத்துள்ளோம்.
இங்லாந்து மற்றும் அமெரிக்க குரல் வல்லுனர்கள்
தரமான நல்ல ஆங்கிலம் பேசுபவர்களிடம் இருந்து நீங்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்வீர்கள்.